Friday, May 24, 2013

புதிதாய் ஒரு காதல்! (பாகம் - 9)

கிரிக்கெட் விளையாட மைதானத்தில் ஒன்றாக கூடினோம்... 100 ரூபாய் பந்தையமாக வைத்தோம்.. விளையாட்டு ஆரம்பித்தது.... எங்கள் சீனியர்கள் முதலில் விளையாடி 15 ஓவர்களில் 110 ஓட்டங்கள் எடுத்தனர்.... இதற்கு முன் நாங்கள் பந்தையமாக வைத்து யாருடனும் விளையாடவில்லை... இதுதான் முதல் தடவை... எங்கள் எல்லோருக்கும் ஒரு வித பயம் தொற்றிகொண்டது....

இருப்பினும் சிறிது தைரியமாக விளையாடினோம்.... ஆரம்பம் முதலே அடித்து விளையாடினோம் .... இருந்தாலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன.... 10 ஓவர்களில் 75 ஓட்டங்கள் எடுத்தோம்... மீதம் 5 ஓவர்களில் 36 ஓட்டங்கள் எடுக்கவேண்டி இருந்தது.... 5 விக்கெட்டுகள் விழுந்து இருந்தது.

பிறகு நான் களம் இறங்கினேன்.... எனக்கு பிறகு நன்றாக ஆட கூடியவர்கள் இல்லை... முழு பொறுப்பும் என்னை மட்டும் சார்ந்து இருந்தது.. நானும் பொறுப்புடன் விளையாடினேன்....ஆனால் என் நண்பர்கள் என்னை நம்பவில்லை... கண்டிப்பாக தோற்று விடுவோம் என்று நினைத்தார்கள்...ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தது....

கடைசி ஓவரில் 10 ஓட்டங்கள் எடுக்கவேண்டும்... 1,2,3,4 பந்துகளில் தலா 1 ஓட்டங்கள் எடுக்கப்பட்டன.. 5 வது பந்தில் ஓட்டங்கள் எடுக்கப்படவில்லை.. 1 பந்தில் 6 ஓட்டங்கள் எடுக்கவேண்டும்.... நான் கடைசி பந்தை எதிர்கொண்டேன்....என் நண்பர்கள் எல்லோரும்... நிச்சயம் தோற்றுவிடுவோம் என்று நினைத்தார்கள்.... எல்லோரும் ஆவலுடன் என் ஆட்டத்தை பார்த்து கொண்டிருந்தார்கள்...... ஆம்.!!!! அந்த கடைசி பந்தில் நான் ஆப் சைடு இல்  சிக்ஸ் அடித்தேன்.... என் நண்பர்களுக்கு சந்தோஷம் கரைபுரண்டு ஓடியது.....

ஆம் வென்று விட்டோம்....... எல்லோரும் என்னை வெகுவாக பாராட்டினார்கள்..... சீனியர்கள் கூட என்னை பாராட்டினார்கள்.... நான் எல்லோருடைய பாராட்டு மழையில் நனைந்தேன்.... அன்றிலிருந்து எனக்கு கல்லூரியில் நல்ல பெயர் கிடைத்தது....

                                                                                                             ----தொடரும் 

Tuesday, May 21, 2013

இப்படி சந்தோசமாக கழிந்த பொழுதுகள் முடிவுக்கு வந்தது.... ஆம்! நானும், அவளும் பிரியும் தருணம் வந்தது... என் மனதில் கவலை தொற்றி கொண்டது. மீண்டும் அவளை எப்பொழுது பார்ப்பேன் என்று... திருமண மண்டபத்தை விட்டு எல்லோரும் கிளம்பினோம்.... நான் முதலில் கிளம்பினேன்.. நான் கிளம்புவதை பார்த்த அவளின் முகம் வாடியதை நானும் பார்த்தேன்..... என்ன செய்வது... எல்லாம் அந்த கடவுளின் திருவிளையாடல் என்று மனதில் நான் நினைத்தேன்.... மண்டபதை விட்டு கிளம்பி சிறிது தூரம் சென்று திரும்பி பார்த்தேன்.... அவள் மண்டபத்தின் வாசலில் கண்களில் கண்ணீருடன் என்னை பார்த்து கொண்டிருந்தால்... நானும் அவளை பார்த்து தலை அசைத்து என் கண்களால் போய் வருகிறேன் என்று சொல்லி கனத்த மனதுடன் சென்றேன்... அன்று முதல் அவளுடைய நினைவு என்னை ஆட் கொண்டது...ஆம் நான் காதலில் விழுந்து விட்டேன்....

                  பொழுது விடிந்தது.... என்னுடைய அம்மா! என்னை: டேய் கதிர்... மணி இப்ப 7 மணி டா... எந்திரி டா....கதிர்.... காலேஜ் போகணும்ல... சீக்கிரம் ரெடி பண்ணிக்கோ.... என்றார்கள்..... நானும் என்னை தயார் படுத்திகொண்டு கல்லூரிக்கு புறப்பட்டேன்... கல்லூரி பேருந்தில் என்னுடைய நண்பர்கள் எல்லாரும் சந்தோசமாய் சிரித்து கொண்டு வந்தார்கள்.... ஆனால் நான் மட்டும் பிரியாவின் நினைவோடு அமைதியாக பேசாமல் இருந்தேன்.. இதை கவனித்த என் நண்பன் ராஜேஷ்! டேய் கதிர்.... என்னடா ஆச்சு....... ஒன்னும் இல்லடா ராஜேஷ்.... என்றேன்.... கல்லூரி வந்தது..... எல்லோரும்  வகுப்பில் நுழைந்தோம்... முதல் வகுப்பு... முடிந்தது..... இரண்டாம் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பு ஆசிரியர் விடுமுறை என்றதால்.... நாங்கள் எல்லோரும் கிரிக்கெட் விளையாட சென்றோம்.... எனக்கு கிரிக்கெட் விளையாட மிகவும் பிடித்தமான ஒன்று..

          மைதானத்தில் எங்களுடைய சீனியர்களும் விளையாடி கொண்டிருந்தார்கள்..... என் நண்பன் செந்தில் சொன்னான்.... டேய் கதிர் சீனியர் களோடு சேர்ந்து பெட் மேட்ச் வைத்து விளையாடுவோம் என்றான்.... நானும்.. நண்பர்களும் எல்லோரும் சம்மதித்தோம்....
                                                                        ----விளையாட்டு தொடரும்..

Sunday, May 19, 2013

அவள், அவளுடைய அம்மா அருகில் அமர்ந்தால்.  நானும் அவளை பார்த்த படி அவளை கண் இமைக்காமல் நேர் எதிரே என்னுடைய அம்மா அருகில் அமர்ந்து அவளை பார்த்து கொன்டிருந்தேன். 

        அவள் என்னை நோக்க, நானும் அவளை நோக்கினேன்.  அவளுடைய காந்த பார்வையில் நான் அந்த நொடியிலேயே மயங்கி விட்டேன் அவள் அழகில். இப்படியே ஒரு  மணி நேரம் கடந்தது.  திருமணம் முடிந்து சாப்பிட எல்லோரையும் அழைத்தார்கள். நான் என் அம்மாவோடு அமர்ந்தேன். அவளும், அவளுடைய அம்மாவோடு என் எதிரே சாப்பிட அமர்ந்தால். நான் நினைத்து கூட பார்க்கவில்லை, என் எதிரே அமர்வாள் என்று!.. இருவரும் பார்த்து, சிரித்து கொண்டபடி சாப்பிட்டு முடித்தோம். 

           பிறகு கீழே இறங்கி வந்தேன். அவளும் என் பின்னாடியே வந்தால்.  சட்டென்று என் அருகில் வந்து......
உங்கள் பெயர் என்ன என்று கேட்டால்.... 
நான் கதிர்வேல் என்றேன்.... '
பிறகு அவள்.. என்னை தெரியுமா என்று கேட்டால்.... 
நான்.... இதற்கு முன் உன்னை பார்த்ததில்லை என்று சொன்னேன்...
அதற்கு அவள்... நான் உங்கள் அப்பாவின் தூரத்து சொந்தம் என்றால்....
நான்.... அப்படியா! உனக்கு யார் சொன்னது என்று கேட்டேன்....
அவள்... என் அம்மா தான் சொன்னார்கள் என்றால்..

இப்படி சிறுது நேரம் பேசி கொண்டிருந்தோம்.... நேரம் போனதே தெரியவில்லை எனக்கு.... 
 
                                                                                      .............மலரும் 


Tuesday, November 22, 2011

புதிதாய் ஒரு காதல்! (பாகம் - 2)

இப்படிஎல்லாம் கதிர்வேல் அந்த சாரல் மழையில் நனைந்த படி தன் குடும்பத்தை பற்றி நினைத்து கொண்டிருந்தான். மழை நின்றது. கதிர்வேல் தன் வீட்டின் தெருவை நெருங்கினான். டேய் கதிர்வேலு! என்று ஒரு குரல்! எங்கடா போயிட்டு வர்ற என்று விஷ்ணு கேட்க! சினிமாவுக்கு போய்ட்டு வர்றேண்டா என்று சொன்னான். ஆம்! விஷ்ணு கதிர்வேலின் நண்பர்களில் நெருங்கிய நண்பன். விஷ்ணுவுக்காக கதிர்வேல் என்ன வேண்டுமானாலும் செய்வான் கதிர்வேல். அதே போலே அவனும். என்ன விட்டுட்டு போயடீள்ள சினிமாவுக்கு என்றான் விஷ்ணு. கதிர்வேல், இல்லடா! காலேஜ் மதியம் வரைக்கும்தான்! அதான், காலேஜ் பசங்களோட போனேன் என்றான். ஓகே டா! நீ சாப்புட்டு ரெஸ்ட் எடு. நான் நாளைக்கு வர்றேன் என்றான் விஷ்ணு. கதிர்வேல் வீட்டில் நுழைந்தவுடன் அவன் அம்மா டாய்! கதிர்வேலு அப்பா இன்னும் வீட்டுக்கு வரல. மணி இப்போ 11 மேல ஆகிருச்சு! எனக்கு பயமா இருக்கு டா என்றால் கதிர்வேளின் அம்மா. எங்கம்மா போயிருக்காறு என கேட்டான். தங்கசிக்கு உடம்பு சரி இல்லடா. டாக்டர்கிட்ட காமிக்க ரூபா இல்லடா அதான் ஒரு 500 ரூபா யார்கிட்டயாச்சும் கடன் வாங்கிட்டு வர சொன்னேன். 8 மணிக்கு போனவரு இன்னும் வீட்டுக்கு வரல. ஓகே மா! நான் பார்த்துட்டு வர்றேன் என்று கிளம்பினான் கதிர்வேல்.
- மலரும் .....

புதிதாய் ஒரு காதல்! (பாகம் - 1)

சில்லென்று குளிர் காற்று வீசி கொண்டிருந்த மாலை வேளையில் சாரல் மழை பெய்ய தொடங்கியது. அந்த சாரல் மழையில் நனைந்த படி வந்து கொண்டிருந்தான் இக்கதையின் நாயகன். அவன் பெயர் கதிர்வேல். அவன் மதுரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை கணிதம் முதலாம் ஆண்டு பயின்று கொண்டிருக்கிறான். கதிர்வேலின் குடும்பத்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால் அவனுடைய அப்பா பெயர் செல்வராகவன், அம்மா கோமதி, தங்கை மாலதி, தம்பி பிரபாகர். கதிர்வேலின் குடும்பம் ஒரு மிடில் கிளாஸ் குடும்பம். வருமானம் பார்த்தால் மாதம் ரூபாய் 5000 மட்டுமே. அப்பா பிரபாகர் ஒரு இரும்பு பட்டறையில் கூலி வேலை பார்க்கிறார். தங்கை வீட்டின் அருகில் உள்ள கார்மேன்ட்சில் தையல் வேலை பார்க்கிறாள். தம்பி +2 படித்து கொண்டிருக்கிறான். அம்மா வீட்டு வேலை செய்யவே சரியாக இருந்தது. கதிர்வேல் மட்டுமே இவருடைய பரம்பரையலே முதல் பட்டதாரி ஆக போகிறார்.

- தொடரும் .....